சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் 320ஆக அதிகரிப்பு

0 6259

சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் 320ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பெண்கள் பயணிக்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் சிறப்பு ரயில்களில் கூட்ட நெரிசல் மிகுந்த நேரம், கூட்ட நெரிசல் இல்லாத நேரம் என பிரிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர் பட்டியலில் வரும் பெண் பயணிகள் புறநகர் ரயில்களில் பயணிக்க எந்த கட்டுப்பாடும் கிடையாது. முன்பு அறிவித்தது போலவே பயணிக்கலாம்.

இவர்கள் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் ரயில்களில் பயணிக்க சாதாரண பயணச்சீட்டை அந்தந்த ரயில் நிலையங்களிலேயே பயணச்சீட்டை பெற்றுக்கொண்டு பயணிக்கலாம். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை அத்தியாவசிய பணியாளர் பட்டியலில் வராத பெண் பயணிகள் காலை 7-9 மற்றும் மாலை 4.30 இரவு 7 மணிவரை இந்த ரயில்களில் பயணிக்க அனுமதி கிடையாது. கூட்ட நெரிசலை குறைக்க தெற்கு ரயில்வே புறநகர் சிறப்பு ரயில் எண்ணிக்கையை 244லிருந்து 320ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments