T 20 போட்டிகளில் தொடர்ச்சியாக 10 வது வெற்றி. கடைசியாக ஆடிய 5 தொடர்களிலும் வெற்றி.- இந்திய அணியின் வெற்றிப்பயணம்.

0 8915
தொடரும் இந்திய அணியின் வெற்றிப்பயணம்.

20 ஓவர் வடிவிலான T 20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தன் ஆதிக்கத்தை தொடர்ந்து வலிமையாக நிரூபித்து வருகிறது.

இப்போது நடந்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் ஒரு நாள் தொடரை 2-1என இழந்திருந்தாலும் T20 தொடரை இன்றைய வெற்றியின் மூலம் கைப்பற்றியுள்ளது.

T 20 யில் இது  இந்திய கிரிக்கெட் அணியின் தொடர்ச்சியான 10 வது வெற்றியாகும். கடந்த வருடம் மும்பையில் மேற்கு இந்திய தீவுகளை வென்ற இந்தியா பிறகு 2-0 என்ற கணக்கில் இலங்கையையும் 5-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தையும் வென்றது. தற்போது ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலேயே தொடர்ந்து 2 போட்டிகளில் வென்று இந்த தொடரையும் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.

ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது ஆட்டத்தில் 194 ரன்களை விரட்டி பிடித்ததன் மூலம், இது வரை 7 முறை 190 க்கும் அதிகமான ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த ஒரே நாடாக இந்தியா திகழ்கிறது. அதிலும் கிரிக்கெட் ஜாம்பவானான ஆஸ்திரேலியாவை, 2013 ல்  ராஜ்கோட்டில் 201 ரன்களையும் , 2016 ல் இதே சிட்னி மைதானத்தில் 198 ரன்களையும் இப்போது 194 ரன்களையும் விரட்டிப்பிடித்து, ஆஸ்திரேலியாவின் 190 க்கும் அதிகமான அதிக பட்ச ஸ்கோர்களை 3 முறை சேசிங் செய்து வெற்றிப்பெற்ற ஒரே நாடும் இந்தியாதான்.

அதே போல் இந்தியா தொடர்ச்சியாக வென்றுள்ள 5 வது T20 தொடர் இதுவாகும். கடைசியாக ஆடியுள்ள தொடர்களில் வங்கதேசம்,மேற்கு இந்திய தீவுகள், இலங்கை நியுசிலாந்து ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை வீழ்த்தியுள்ளது. கடைசி 7 தொடர்களில் ஒன்றில் கூட தோற்றதில்லை.5 தொடர்களுக்கு முன்னாள் மேற்கு இந்திய தீவுகளை வென்ற இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்காவிடம் மட்டும் 1-1 என்று சமன் செய்திருந்தது.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து,நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா  நாடுகளான SENA நாடுகளை 20 வடிவ போட்டிகளில் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை இந்திய அணியின் விராட் கோலியைத்தான் சேரும்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments