பொன்னை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 4183
பொன்னை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு.! கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை ஆற்றில் திடீரென ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக சித்தூர் மாவட்டம் கலவகுண்டா அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் பொன்னை ஆறு மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஆற்றங்கரையோர கிராம மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments