மூழ்கிய விளைநிலங்கள்.. வேதனையில் விவசாயிகள்

0 2258
கடலூர் மாவட்டத்தைப் புரட்டிப் போட்ட 3 நாள் மழையில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தைப் புரட்டிப் போட்ட 3 நாள் மழையில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீர நத்தம், கீழ வன்னியூர், குமராட்சி கீழக்கரை, நந்திமங்கலம், அத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கின.

பெருமாள் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத் கடலூர் மாவட்ட சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வடலூர் அருகே மருவாய் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த மீன் குட்டைகள் மழைநீரில் மூழ்கி 15 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

திட்டக்குடி, வேப்பூர் தாலுகாக்களில் 162 வீடுகள் இடிந்து விழுந்தன. 10 ஆயிரம் ஏக்கர் நெல், பருத்தி, மக்காச்சோளம், வாழை, மரவள்ளி கிழங்கு உள்ளிட்டவை நீரில் மூழ்கின.

சிதம்பரம் பகுதியில் பெய்த தொடர் கனமழையில் இளமையாக்கினார் கோவில் தெப்பக்குளத்தில் பக்கவாட்டுச் சுவர்கள் அடியோடு உள்வாங்கின. கோவிந்தசாமி தெரு, ஓமகுலம் சிவசக்தி நகர், இந்திரா நகர், உசுப்பூர் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது.

தில்லை காளியம்மன் கோயில் தெரு சுபிதா நகரில் வெள்ளத்தில் சிக்கிய ஒரு குடும்பத்தினரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் படகில் சென்று மீட்டனர்.

பண்ருட்டி கம்மாபுரம் கிராமத்தில் என்.எல்.சிக்கு சொந்தமான ஏரியில் உடைப்பு ஏற்பட்டு 500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments