”தான் தோனி அல்ல, அவரைப் போன்று விரைவாக செயல்படமுடியவில்லை’’ ஆட்டகளத்திலேயே தோனியை புகழ்ந்த வேட்

0 40846

ஷிகர் தவானின் ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்ட ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் (mathew wade), தன்னால் தோனியைப் போன்று விரைவாக செயல்பட முடியவில்லை எனக் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிட்னியில் நடைபெற்ற 2வது டி20 போட்டியின்போது ஸ்வெப்சன் வைடாக வீசிய பந்தை தவான் அடிக்க முயற்சிக்க அது விக்கெட் கீப்பர் மேத்யூ வேடின் கைகளில் தஞ்சம் புகுந்தது.

அவரை ஸ்டம்பிங் செய்ய வேட் முயற்சிக்க, அதற்குள் சுதாரித்த தவான் நூலிழையில் தப்பினார். அப்போது, தான் தோனி அல்ல, அவரைப் போன்று விரைவாக செயல்படமுடியவில்லை என ஆட்டகளத்தில் வேட் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments