”நடராஜனுக்கே ஆட்டநாயகன் விருது கிடைத்திருக்கவேண்டும்” - ஹர்திக் பாண்டியா

0 19678
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வான ஹர்திக் பாண்டியா, தமிழக வீரர் நடராஜனுக்கே அந்த விருது கிடைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வான ஹர்திக் பாண்டியா, தமிழக வீரர் நடராஜனுக்கே அந்த விருது கிடைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இறுதி கட்டத்தில் 22 பந்துகளில் 42 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்ட பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

விருதை பெற்றுக்கொள்ள வந்தபோது பேசிய அவர், பவுலர்களுக்கு சவாலான இந்த ஆடுகளத்தில் சிறப்பாக பந்துவீசிய நடராஜனே இந்த விருதுக்கு பொருத்தமானவர் எனக் கூறினார்.

இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments