24 மணி நேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் புதிய மருந்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக ஜியார்ஜியா விஞ்ஞானிகள் தகவல்
கொரோனாவை 24 மணி நேரத்தில் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து ஒன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்க்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோல்நுபிராவிர் (Molnupiravir) என்ற இந்த ஆன்டிவைரல் மருந்தை அமெரிக்காவின் ஜியார்ஜியா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக நேச்சர் மைக்ரோபயாலஜி மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
இது வாய் வழியாக உட்கொள்ளப்படும் மருந்து என்பதால், கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அது தீவிர நோயாக மாறுவதை உடனே தடுப்பதுடன், தொற்று காலத்தை குறைத்து, நோயாளிகள் நீண்ட நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து இப்போது இரண்டு மற்றும் இறுதிக்கட்ட கிளினிகல் சோதனைக் கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments