கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் 11ஆம் நாளாகப் போராட்டம்
மத்திய அரசுடனான ஐந்து சுற்றுப் பேச்சுக்களில் முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் பதினோராம் நாளாக இன்றும் நீடித்தது.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நவம்பர் 26 முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை ஐந்து சுற்றுப் பேச்சுக்கள் நடத்தியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
ஆறாம் சுற்றுப் பேச்சு வரும் ஒன்பதாம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், அதற்கு முன் எட்டாம் தேதி நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
Comments