சுரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல்ஹாசன் பேசுகிறார் -அமைச்சர் கே.பி. அன்பழகன்

0 2927
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல்ஹாசன் பேசி வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா விவகாரத்தில் உண்மை நிலை தெரியாமல் கமல்ஹாசன் பேசி வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சுரப்பா மீது நிதி முறைகேடு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, விசாரனை நடத்த தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சுரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்து கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தருமபுரியில் அதிமுக அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவை திறந்து வைத்த அமைச்சரிடம் அதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், பேராசிரியர் மற்றும் துணைவேந்தர் நியமன நடவடிக்கைகளில் அரசுக்கு சம்பந்தமில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments