ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரை வென்றது இந்திய அணி

0 8125
சிட்னியில் நடைபெற்ற 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

சிட்னியில் நடைபெற்ற 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மாத்யூ வேட் 58 ரன்களை சேர்த்தார். தமிழக வீரர் நடராஜன் அபாரமாக பந்துவீசி, 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் களம்புகுந்த இந்திய அணி வீரர்கள் ஆரம்பம் முதலே பட்டையை கிளப்பினர். அபாரமாக விளையாடிய ஷிகர் தவான் 52 ரன்களும், ஹார்திக் பாண்டியா 42 ரன்களும், விராட் கோலி 40 ரன்களும் குவித்தனர். இதனால் 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments