கேரள உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா நோயாளிகளுக்கு அஞ்சல் வாக்கு

0 1381

கேரளாவில் விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வாக்காளர்கள் அஞ்சல் வாக்குகளை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அஞ்சல் வாக்குகளை விநியோகிக்கும் பணியும் துவக்கப்பட்டுள்ளது.யார் யாருக்கு கொரோனா தொற்று உள்ளது என்ற பட்டியலை மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தயார் செய்து மாநில தேர்தல் ஆணையத்திடம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்குமான தேர்தல் வரும் 8, 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் 3 கட்டங்களாக நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை வரும் 16 ஆம் தேதி நடக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments