ஒரு விரல் நீளமுள்ள குள்ளக் குரங்குகள்... இங்கிலாந்து பூங்காவில் அதிசயம்!

0 46716
5 சென்டி மீட்டர் அளவே உள்ள புதிதாக பிறந்துள்ள குக்குரங்குகள்

ங்கிலாந்தில் உள்ள செஸ்டர் (Chester) உயிரியில் பூங்காவில் உலகத்திலேயே சிறிய வகை குரங்கான மார்மோசெட் எனப்படும் அரிய வகை குக்குரங்கினங்கள் உள்ளன. இந்த உயிரியல் பூங்காவில் சோய் மற்றும் பால்டிரிக் என்ற குரங்குகளுக்கு கடந்த செப்டம்பர் 6 ம் தேதி இரட்டையர்களாக இரண்டு குரங்கு குட்டிகள் பிறந்தன. இந்த குக்குரங்குகள் இப்போது வெறும் 5 சென்டி மீட்டர் நீளமே உள்ளன. அதன் எடை  வெறும் 10 கிராம்  மட்டுமே இருக்கிறது. இந்த அழகு குரங்கு குட்டிகள் இப்போது பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

 குக்குரங்கு என்பது உலகிலேயே மிகவும் குட்டியான குள்ளக்குரங்காகும். இந்த வகை குக்குரங்குகள் தென்அமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழக்கூ டியவை. மிகவும் சிறிய உருவுடன் காணப்படும், இந்த குரங்குகளின் வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் உடல் நீளம் 14 முதல் 16 செமீ மட்டுமே இருக்கும். வளர்ந்த குரங்குகளின் மொத்த எடையே 100 கிராம் வரைதான் இருக்கும்.

பிக்மி மார்மோசெட் (Pigmy Marmoset)எனப்படும் இந்த வகை குக்குரங்குகள் மரங்களில் வடியும் பிசினைத்தான் உணவாக உண்ணுகின்றன. இந்த குரங்குங்கள் இயற்கையில் ஏறத்தாழ 11 அல்லது 12 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை. ஆனால் உயிரியல் பூங்காக்களில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றன. அளவில் குட்டியாக இருந்தாலும் இந்த குக்குரங்குகள் மரத்திற்கு மரம், கிளைக்கு கிளை 16 அடி வரை ஒரே தாவாக தாவக்கூடியவை.

இந்த அரிய வகை குக்குரங்குகள் ,பொதுவாக பிறக்கும்போது இரட்டை குரங்குகளாகத்தான் பிறக்குமாம். அது போலவே இந்த செஸ்டர் உயிரியல் பூங்காவில் பிறந்துள்ள இந்த அதிசய இரட்டைப்பிறவி குட்டி குரங்குகள் தாய் குரங்கிடம் உணவு எடுத்துக்கொள்வதும், தாயுடன் கொஞ்சி விளையாடி அதன் முதுகிலேயே சுகமாக பயணிப்பதும் பார்ப்பதற்கே வேடிக்கையாகவும் சுவாரஸியமாகவும் இருக்கின்றது. இந்த அதிசய இரட்டைப்பிறவிகளை பார்க்க உயிரியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. 

இந்த உயிரியல் பூங்காவின் விலங்குகள் காப்பாளர் ஹோலி வெப், ”இந்த குக்குரங்குகள் இப்போது ஒரு எலுமிச்சை பழம் அளவிலேயே உள்ளன. அப்படியானால் இவை பிறக்கும் போது எந்த அளவில் இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்” என்று கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments