“நான் யார் தெரியுமா ?” போதையில் போலீசிடம் சீறிய இளம்பெண்

0 57632
சென்னையில் குடிபோதையில் தனது ஆண் நண்பருடன் கார் ஓட்டி வந்த இளம்பெண், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை ஆபாசமாகப் பேசி, காலால் எட்டி உதைக்க முற்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னையில் குடிபோதையில் தனது ஆண் நண்பருடன் கார் ஓட்டி வந்த இளம்பெண், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை ஆபாசமாகப் பேசி, காலால் எட்டி உதைக்க முற்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

சனிக்கிழமை இரவு திருவான்மியூர், பெசண்ட் நகர், ஈ.சி.ஆர் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

திருவான்மியூர் பேருந்து நிலையம் பின்புறமுள்ள சவுத் அவென்யூ சாலையில் வோக்ஸ்வேகன் கார் ஒன்று விபத்தை ஏற்படுத்துவது போன்று அதிவேகமாக வந்துள்ளது. காரை தடுத்து நிறுத்தி, அதனை ஓட்டி வந்த நபர் மது அருந்தியிருக்கின்றாரா என பிரீத் அனலைசர் கொண்டு போலீசார் சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது காரில் அவருடன் வந்த அந்தக் காருக்குச் சொந்தக்காரரான இளம்பெண் கீழே இறங்கி, போலீசாரை ஆபாசமாகப் பேசத் தொடங்கியுள்ளார்.

சிறிது நேரத்தில் ரோந்துப் பணியில் இருந்த திருவான்மியூர் போலீசார் அங்கு வந்து பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ள முயன்றனர். ஆனால் ”நான் யார் தெரியுமா, எனது தந்தை யார் தெரியுமா” என்று அவர்களிடம் எகிறிய போதைப் பெண், தாம் ஊடகத்தில் பணிபுரிவதாக பொய் கூறி மிரட்டும் தொணியில் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் போக்குவரத்து போலீஸ் ஒருவரை காலால் எட்டி உதைக்க முயன்றார் அந்த இளம்பெண்..

இளம்பெண்ணின் ஆபாச மிரட்டல் மற்றும் எல்லை மீறிய செயல்களை மொபைல் போனிலும் தங்களது சட்டையில் பொருத்தப்பட்டிருக்கும் “பாடி ஒன்” (Body One) என்ற பிரத்யேக கேமராவிலும் போக்குவரத்து போலீசார் பதிவு செய்துகொண்டனர்.

சோதனையில் இருவரும் மது அருந்தியிருந்தது உறுதியானதை அடுத்து, அவர்கள் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். தொடர்ந்து திருவான்மியூர் காவல் நிலையத்திலும் புகாரளித்தனர்.

சட்டம் ஒழுங்கு போலீசாரின் விசாரணையில் அந்தப் பெண் அடையாறு பகுதியைச் சேர்ந்த காமினி என்பதும் சினிமாவில் உதவி இயக்குனராகப் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்தது. உடன் வந்தவர் பெயர் டோட்லா சேஷூ பிரசாத் என்பதும் மென் பொறியாளராகப் பணிபுரிபவர் என்பதும் தெரியவந்தது.

காரை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், காலை தாயுடன் காவல் நிலையம் வந்த காமினி, விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், ஆபாசமாக பேசுதல், பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments