பிரான்ஸில் காவல்துறையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை
பிரான்ஸில் காவல்துறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது.
போலீசாரின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிடுவதை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் புதிய மசோதாவிற்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து, பாரிஸில் கூடிய போராட்டக்காரர்கள் சாலையில் பொருட்களை தீயிட்டு கொழுத்தியும், கடைகளை அடித்து நொறுக்கியும், போலீசார் மீது கற்களை வீசி எறிந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments