கொடி நாளை முன்னிட்டு முப்படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களுக்கு ஆளுநர், முதலமைச்சர் வாழ்த்து
கொடி நாள் நாளை அனுசரிக்கப்பட இருப்பதை முன்னிட்டு முப்படை வீரர்கள், முன்னாள் படை வீரர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம் நாட்டுக்கு எதிராக வெளியிலிருந்து மேற்கொள்ளப்படும் தாக்குதலை முறியடித்து உற்ற துணையாக அவர்கள் திகழ்வதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், படைவீரர்களது தியாகத்தையும், சேவையையும் மனதார போற்றும் வேளையில், கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட மக்களை கேட்டுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments