விவசாயிகள் போராட்ட குழு 8ஆம் தேதி அறிவித்துள்ள பாரத் பந்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 8 ஆம் தேதி, இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ள பாரத் பந்துக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மதிமுக பொது செயலாளர் வைகோ, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்ட 10 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Comments