வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை தொடரும் என்பதில் உறுதி - மத்திய வேளாண் இணை அமைச்சர்
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை தொடரும் என்பதை எழுத்துபூர்வமாக எழுதி தர மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய வேளாண் இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் குறித்து டுவிட் செய்துள்ள அவர், தமது சொந்த நிலங்களில் உழைக்கும் உண்மையான விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்க்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில அரசுகளும், எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் போராட்டத்தை தூண்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கூடுதல் சுதந்திரம் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் எந்த முடிவையும் விவசாயிகள் எடுக்கமாட்டார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments