வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாடுகளில் இருந்து படையெடுத்து வரும் பறவைகள்.. முழு கொள்ளளவை எட்டிய ஏரி
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் படையெடுத்து வரும் சூழலில், அங்குள்ள ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கனமழை காரணமாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரி தனது முழு கொள்ளளவான 16 அடியை எட்டி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வழக்கமாக, நவம்பர், டிசம்பர் காலங்களில் வெளிநாட்டு பறவைகள் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு, மழை காரணமாக ஏரியும் நிரம்பியுள்ளதால், பறைவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவாக இருக்கும் என கருதப்படுகிறது.
பர்மா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பறவைகள் வேடந்தாங்கலில் தஞ்சமடைந்துள்ளன. இதனிடையே, சரணாலயத்தில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
Comments