நிவர் புயல் நிவாரணமாக ரூ 3,758 கோடி வழங்க மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை

0 1196
நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய வந்துள்ள மத்திய குழுவிடம், புயல் நிவாரணப்பணிக்கு 3 ஆயிரத்து 758 கோடி ரூபாய் வழங்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

நிவர் புயல் சேதங்களை ஆய்வு செய்ய வந்துள்ள  மத்திய குழுவிடம்,  புயல் நிவாரணப்பணிக்கு 3 ஆயிரத்து 758 கோடி ரூபாய் வழங்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

உள்துறை இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிஹோத்ரி தலைமையில் வந்த 7 பேர் கொண்ட குழுவினர், சென்னையில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை நேற்று சந்தித்துப் பேசினர்.

அப்போது புயல், மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்துப் புகைப்படம், காணொலி ஆகியவற்றின் மூலம் குழுவினருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து   எழிலகத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் R.B.உதயகுமார், தற்காலிக நிவாரணமாக  650 கோடி ரூபாயும்,   உடனடி சீரமைப்பிற்கு  3,108 கோடி ரூபாயும் வழங்க  கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments