திருவனந்தபுரம் உயிரித் தொழில்நுட்ப மையத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் பெயரைச் சூட்டுவதற்குக் கேரள முதலமைச்சர் எதிர்ப்பு

0 4016

திருவனந்தபுரத்தில் உள்ள ராஜீவ்காந்தி உயிரித் தொழில்நுட்ப மையத்தின் இரண்டாவது வளாகத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வாக்கரின் பெயரைச் சூட்டும் முடிவைக் கைவிடும்படி மத்திய அரசிடம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தனுக்குப் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில், கேரள அரசிடம் இருந்த உயிரித்தொழில்நுட்ப மையம் உலகத் தரத்தில் வளர்ச்சியடைவதற்காக மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டதை நினைவுகூர்ந்துள்ளார்.

உயிரித்தொழில்நுட்ப மையத்தின் இரண்டாவது வளாகத்துக்குப் புகழ்பெற்ற இந்திய அறிவியலாளர் பெயரைச் சூட்டுவதன்மூலம், சர்ச்சையைத் தவிர்ப்பதுடன், உலகின் நன்மதிப்பைப் பெறமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments