இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி ஃபைசர் விண்ணப்பம்
தனது கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்குமாறு ஃபைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இதற்காக தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் ஃபைசரின் இந்திய பிரிவு சமர்ப்பித்த விண்ணப்பத்தில், தடுப்பூசியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
புதிய சட்டங்களின் அடிப்படையில், இந்தியாவில் கிளினிகல் சோதனைகளை நடத்தாமலேயே தடுப்பூசியை விற்க அனுமதிக்குமாறும் கேட்டுக் கோள்ளப்பட்டுள்ளது. ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசிக்கு கடந்த 2 ஆம் தேதி பிரிட்டனும், அதைத் தொடர்ந்து 4 ஆம் தேதி பஹ்ரைனும் தற்காலிக அனுமதி வழங்கின.
Comments