மத்திய அரசுடன் நேற்று பேச்சு வார்த்தையில் மௌன விரதத்தை சாதித்த விவசாயிகள்
மத்திய அரசுடன் நேற்று 40 விவசாயிகள் டெல்லி விக்யான் பவனில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது மௌன விரதம் இருந்தனர்.
அரசுப் பிரதிநிதிகளுடன் விவசாயிகள் வாய் திறந்து பேசவே இல்லை. மாறாக மத்திய அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை ஏற்பதாகவும் ஏற்கவில்லை என்றும் கையில் கொண்டு வந்த தட்டிகளில் யெஸ், நோ என எழுதி காட்டினார்கள்.
மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் விவசாயிகள், நேற்றும் தங்களுக்கான உணவு குடிநீர், தேநீர் போன்றவற்றை கொண்டு வந்தனர்.
Comments