மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வரும் 9 ம் தேதி 6வது சுற்று பேச்சு வார்த்தை - அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

0 1479
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வரும் 9 ம் தேதி 6வது சுற்று பேச்சு வார்த்தை - அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே வரும் 9 ம் தேதி 6வது சுற்று பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி எல்லையில் கடும் குளிரில் போராட்டத்தில் ஈடுபடும் முதியோரையும் பெண்களையும் துன்புறுத்த வேண்டாம் என்றும், அவர்களை வீட்டுக்கு அனுப்பி விடவும் கோரிக்கை விடுத்தார்.

டெல்லிநகர மக்களும் கடும் வாகன நெரிசல் போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாவதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள விவசாய சங்கங்கள் பேச்சு வார்த்தையில் பலன் கிடைக்காவிட்டால், போராட்டத்தைத் தீவிரப்படுத்த இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments