வலையில் சிக்கிய திமிங்கல சுறா... மீனவர்கள் தீவிர முயற்சி எடுத்து மீண்டும் கடலில் விடுவிப்பு
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வலையில் சிக்கிய அரிய வகை திமிங்கல சுறா மீனை மீண்டும் கடலில் மீனவர்கள் விடுவித்த வீடியோ வைரலாகி வருகிறது.
புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ்கடலுக்கு செல்லாத மீனவர்கள் சிலர், கடந்த வெள்ளிக்கிழமை சங்குமுகத்தில் கடற்கரையோரம் உள்ள கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது வலை ஒன்றில் திமிங்கல சுறா ஒன்று சிக்கிக் கொள்ளவே, அதை சுமார் 60 மீனவர்கள் ஒன்றாக தள்ளியும் இழுத்தும் சென்று கடலில் விட்டனர்.
அங்குள்ள செய்தியாளர் ஒருவர் இக்காட்சியை செல்போனில் வீடியோ எடுத்து சமூக இணையதளத்தில் வெளியிடவே அது வைரலாகி வருகிறது.
Watch: An endangered whale shark released into the sea by fishermen in Kerala's Shanghmukham on Friday, after it was caught in their net. A group of fishermen tore into the net, and helped it back, in a matter of minutes, says Ajith. Video courtesy: Ajith Shanghmukham. pic.twitter.com/jDcr12VCuK
— Sneha Koshy (@SnehaMKoshy) December 5, 2020
Comments