சென்னை குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 26 லட்சம் ஏழை மக்களுக்கு இலவசமாக 3 வேளை உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு

0 1936

சென்னை குடிசைப்பகுதிகளில் வசிக்கும் 5.3 லட்சம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 26 லட்சம் ஏழை மக்களுக்கு, நாளை காலை முதல் வரும் 13 ஆம் தேதி இரவு வரை 3 நேரமும் உணவு சமைத்து வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தெரிவித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், இதற்காக சென்னையின் 15 மண்டலங்களிலும் சமூக சமையலறை அமைக்கப்பட்டு, ஏழை மக்களுக்கு சூடான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சென்னையில் 1950 பகுதிகள் பாதிக்கப்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், 600 இடங்களில் மாநகராட்சி பள்ளிகள், அம்மா உணவகம் மற்றும் சமூக சமையலறைகளில் உணவு சமைக்கப்படும் என அவர் கூறினார்.

புயல் மற்றும் மழை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களின் பசியை போக்கும் இந்த திட்டம், இந்த மிகப்பெரிய சமூக உணவு சேவை திட்டம் என்ற சாதனையை ஏற்படுத்தும் எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments