கொரோனாவுக்கான சித்த சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

0 1330

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவ மையங்களில் உடனடியாக ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்து கோயில்களிலும் சித்த மருத்துவ மையம் அமைக்கக் கோரிய வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் உடனடியாக தமிழகத்திலுள்ள 33 கொரோனாவுக்கான சித்த மருத்துவ மையத்திலும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

முன்னதாக, வருங்காலங்களில் சித்த மருத்துவத்தில் ஊசி போடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments