அரசுப் பேருந்து ஓட்டுநரை நடுரோட்டில் தாக்கிய இளைஞர்... மண்டை உடைந்து ஓட்டுநர் காயம்
திருச்சியில் அரசு போக்குவரத்து பேருந்து டிரைவரை நடுரோட்டில் வைத்து இளைஞர் தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
சீனிவாச நகரை சேர்ந்த உமர் பாரூக், சத்திரம் பேருந்து நிலையம் அருகே முன்னால் சென்ற பேருந்தை முந்தி செல்ல முயன்றதாகவும், அப்போது டிரைவர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டபோது இருவருக்கும் கைகலப்பு நேரிட்டது.
இதில் உமர் பாரூக் தாக்கியதில் டிரைவர் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து தப்பியோட முயன்ற அவரை அங்கிருந்தோர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது உமருக்கும் அடி விழுந்தது.
Comments