மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தாழ்வு பகுதியாக மாறியது
மன்னார் வளைகுடாவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.
இன்று பகல் பதினொன்றரை மணி நிலவரப்படி ராமநாதபுரம் மாவட்டத்தின் அருகே மன்னார் வளைகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவியதாக வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரப் பகுதிகளுக்கு இன்றும், குமரிக்கடல், தென்கேரளக் கடற்கரைப் பகுதிகளுக்கு நாளை வரையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
Comments