புரெவி புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழையால் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்
புரெவி புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்த 7 பேர் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து சென்னை- தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆடு, மாடு, மற்றும் வீடு இழந்தோருக்கும் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Comments