எம்ஜிஆர் கட்சி துவங்கியபோது அவருக்கு துணையாக இருந்தவர்கள் ரஜினிக்கும் துணையாக வருவார்கள் - தமிழருவி மணியன்
ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் செய்தியாளர் சந்திப்பு
புதிய கட்சி துவங்கும் தேதியை டிசம்பர் 31ந் தேதி ரஜினி அறிவிப்பார்
புதிய கட்சி துவங்குவது குறித்து எந்த முடிவையும் ரஜினி தான் அறிவிப்பார்
ரஜினி ஆரம்பிக்கும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தற்போது விவாதிக்கவில்லை
கட்சி ஆரம்பித்த பிறகு தான் கூட்டணி குறித்தெல்லாம் ரஜினி முடிவு செய்வார்
திமுக மற்றும் அதிமுகவின் தவறுகளை பேசி அரசியல் செய்ய ரஜினி விரும்பவில்லை
ரஜினியின் ஆன்மீக அரசியல் என்பது எதிர்மறை அரசியல் அல்ல
ரஜினி தற்போது செய்யப்போவது நேர்மறை அரசியல்
தமிழக மக்களுக்கு என்ன செய்யப்போகிறேன் என்பதை கூறியே ரஜினி அரசியல் செய்வார்
அனைத்து மக்களையும் அன்பால் அரவணைத்து ஆரத் தழுவுவது தான் ஆன்மீக அரசியல்
ஆன்மீக அரசியல் என்பது எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல, எந்த மதத்திற்கும் எதிரானதும் அல்ல
ஆன்மீக அரசியலுக்கும் மத அரசியலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது
மகாத்மா காந்தி தான் முதன் முதலில் ஆன்மீக அரசியல் குறித்து பேசினார் - தற்போது ரஜினி பேசுகிறார்
கடந்த காலங்களை பற்றி பேசினால் யாராலும் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது
ரஜினியை ஒரு நடிகராக தூரத்தில் இருந்து பார்த்த போது அவரைப்பற்றி எனக்கு தெரியாது
ரஜினியை நேரில் சந்தித்த பிறகு தான் அவரைப்பற்றி எனக்கு உண்மை தெரியவந்து ஏற்றுக் கொண்டேன்
காந்திய மக்கள் இயக்கத்தை ரஜினி ஆரம்பிக்கும் கட்சியோடு இணைத்துவிடுவேன்
எம்ஜிஆர் அரசியல் கட்சி துவங்கியபோது அவருக்கு துணையாக இருந்தவர்கள் ரஜினிக்கும் துணையாக வருவார்கள்
ரஜினிகாந்த் கையில் எடுத்திருக்கும் ஆன்மீக அரசியல், மகாத்மா காந்தியின் கண்டுபிடிப்பு என்று புதிய கட்சியின் மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை - போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் துடன்சுமார் 2 மணி நேரம் நடத்திய ஆலோசனைக் குப் பின் பேசிய தமிழருவி மணியன், ஆன்மிக அரசியல் என்பது எந்த மதத்திற்கும் ஆதரவானதோ அல்லது எதிரானதோ இல்லை என்றார்.
தேர்தல் கூட்டணி குறித்து, புதிய அரசியல் கட்சி உதயமான பின், ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என அவர் கூறினார்.
எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கியபோது அவருடன் நின்றவர்கள் ரஜினியுடனும் நிற்பார்கள் என்று கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, தமிழருவி மணியன் நம்பிக்கை தெரிவித்தார்.
Comments