வணக்கம்டா மாப்பிள்ளை தென்னிந்தியாவிலிருந்து... டேவிட் வார்னரை அசத்திய புகைப்படம்!

0 10026

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சென்னை மீது பற்று கொண்டவர். சமீபத்தில் நிவர் புயல் வந்த போது, 'சென்னையில் எல்லோரும் பாதுகாப்பா இருப்பீங்கனு நம்புகிறேன்' என்று ட்விட்டரில் பதிவிட்டு தன் அக்கறையை காட்டினார். அடிக்கடி தமிழ் பாடல்களுக்கும் டேவிட் வார்னர் தன் மனைவி, மகளுடன் ஆட்டம் போடுவதோடு, அந்த வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் அப்லோடு செய்வார். இன்ஸ்டாகிராமிலும் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் வார்னருக்கு உள்ளனர்.

இந்த நிலையில், கேரளாவை வேர்ந்த லிஜேஷ் என்ற ஓவியர் தென்னிந்திய தோற்றத்து டன் கூடிய வார்னரின் ஓவியத்தை வரைந்துள்ளார். பிறகு, அந்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டேவிட் வார்னரை டேக் செய்து பதிந்துள்ளார். இந்த புகைப்படத்தை தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள டேவிட் வார்னர், இந்த அழகான புகைப்படத்துக்கு உங்கள் கமாண்டுகளை அனுப்புங்கள் என்று பதிவிட்டுள்ளார். 'தமிழ்நாட்டு மனிதர் போலவே இருக்கீங்க...' என்று பலரும் கமான்டுகளை தட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments