கனமழையால் 80,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் எண்பதாயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் நான்காவது நாளாகத் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தியாகராஜர் கோவில் அருகே உள்ள மிகப் பெரிய கமலாலயக் குளம் நிரம்பி வருகிறது.
கனமழையால் காவிரியின் கிளையாறுகளிலும், கால்வாய்களிலும், வாய்க்கால்களில் கரைபுரண்டு வெள்ளம் பாய்கிறது. கால்வாய்களில் ஒருசில இடங்களில் மதகுகளில் செடிகொடிகள் அடைத்துக் கொண்டுள்ளதால் உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிகளில் வெள்ளம் பாய்ந்து வருகிறது. இவ்வாறு மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் எண்பதாயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
திருவாரூர் அடுத்த எண்கண் என்ற இடத்தில் வெட்டாற்றில் மதகில் செடிகொடிகள் அடைத்துள்ளதால் கரையில் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. கரையில் உடைப்பு ஏற்பட்டால் அடைக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மதகில் அடைத்துள்ள செடிகொடிகளை அகற்றும் பணிகளைத் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா,கண்காணிப்பு அலுவலர் சில்பா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
Comments