முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளில் அதிமுகவினர் வீட்டில் விளக்கேற்றி வணங்க முதலமைச்சர் வேண்டுகோள்

0 2601
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளில், அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் தமது இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்து அவரது திருவுருவப் படத்தின் முன் அன்போடு வணங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவின் 4 ஆம் நினைவு தினத்தை ஒட்டி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

ஜெயலலிதாவின் நினைவு தினத்தை ஒட்டி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதி மொழி வாசிக்க அங்கு திரண்டிருந்த கட்சியினர் அதை திரும்ப கூறினர்.

இயற்கை பேரிடர் நேரங்களில் சுற்றிச் சுழன்று அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் ஜெயலலிதா என பன்னீர்செல்வம் தமது உறுதி மொழியில் குறிப்பிட்டார். அவர் காட்டிய வழியில் பல்வேறு இயற்கை பேரிடர் நேரங்களில் மக்களுக்காக தமிழக அரசு பணியாற்றுவதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments