சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கி அறுவடை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயிரிடப்பட்ட முள்ளிங்கியை அங்கு தங்கி உள்ள நாசா விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ் அறுவடை செய்தார்.
கடந்த 30 ஆம் தேதி அவர் நடத்திய அறுவடையை ஒரு வரலாற்று சாதனை என நாசா சித்தரித்துள்ளது.
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பெட்டி ஒன்றில் ஆக்சிஜன், நீர், உரம் என அனைத்தும் மிகவும் கட்டுப்பாட்டுடன் துல்லியமாக வழங்கப்பட்டு வளர்க்கப்பட்ட இந்த முள்ளங்கிப் பயிர் 27 நாட்களில் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
புவியீர்ப்பு விசை இல்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடந்த இந்த முள்ளங்கி சாகுபடி பற்றிய வீடியோ ஒன்றையும் நாசா வெளியிட்டுள்ளது.
வருங்காலத்தில் விண்ணுக்குச் செல்லும் வீரர்களுக்கு பிரெஷ்ஷான உணவுகளை வழங்க வேண்டும் என்ற திட்டத்துடன் இந்த சாகுபடி திட்டத்தை நாசா பரிசோதித்து பார்த்துள்ளது.
Comments