பிரதமர் மோடி இல்லத்தில் கூடிய மத்திய அமைச்சர்கள்.. விவசாயிகளுடன் பேச்சு நடத்த உள்ளதை முன்னிட்டுச் சந்திப்பு

0 1389
பிரதமர் மோடி இல்லத்தில் கூடிய மத்திய அமைச்சர்கள்.. விவசாயிகளுடன் பேச்சு நடத்த உள்ளதை முன்னிட்டுச் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் அவரை மத்திய அமைச்சர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் 10 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர்களுடன் வியாழனன்று பேச்சு நடத்திய விவசாய சங்கப் பிரதிநிதிகள் புதிய வேளாண் சட்டங்களின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினர்.

இன்று பிற்பகல் 2 மணிக்கு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் மீண்டும் பேச்சு நடத்த உள்ளனர். இதை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நரேந்திர தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினர். விவசாயிகளின் கோரிக்கைகள், அவற்றுக்கான தீர்வுகள் குறித்து அவர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments