இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பலமணி நேரம் தவிக்கவிடக் கூடாது - எச்டிஎப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
இலட்சக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பலமணி நேரம் தவிக்கவிடக் கூடாது என எச்டிஎப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
எச்டிஎப்சி வங்கியின் இணைய வங்கிச் சேவை, மின்னணுப் பணப்பரிமாற்றச் சேவை ஆகியன அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வந்த நிலையில், நவம்பர் 21ஆம் நாள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இணையத்தளச் சேவைகள், கடன் அட்டை வழங்குதல் ஆகியவற்றை மேற்கொண்டு விரிவாக்க வேண்டாம் என எச்டிஎப்சி வங்கிக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
விரிவாக்கத்துக்கு முன், தகவல் தொழில்நுட்ப அமைப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
ஸ்டேட் வங்கியின் யோனோ செயலியின் சேவை பாதிக்கப்பட்டது பற்றியும் ஆய்வு செய்து வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
Comments