கனமழை காரணமாக விழுப்புரம் வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியது

0 1413
கனமழை காரணமாக விழுப்புரம் வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியது

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணை, முழு கொள்ளளவான 32 அடி எட்டியுள்ளது.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1876 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பதால், அப்பகுதி விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து வினாடிக்கு 1,350 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையை ஒட்டியுள்ள 21 கிராமங்களுக்கு, தண்டோரா போடப்பட்டு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments