குஜராத்தைச் சேர்ந்த வைரவியாபாரி 12,638 வைரக்கற்கள் பதிக்கப்பட்ட மோதிரத்தை உருவாக்கி உலக சாதனை

0 2265
குஜராத்தைச் சேர்ந்த வைரவியாபாரி 12,638 வைரக்கற்கள் பதிக்கப்பட்ட மோதிரத்தை உருவாக்கி உலக சாதனை

12 ஆயிரத்து 638 வைரக்கற்கள் பதித்த மோதிரத்தை வடிவமைத்து குஜராத்தைச் சேர்ந்த வைரவியாபாரி உலக சாதனை படைத்துள்ளார்.

சூரத் நகரைச் சேர்ந்த ஹரீஷ் பன்சால் என்பவர் ரெனானி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

உலக சாதனை படைக்க விரும்பிய ஹரீஷ், 12 ஆயிரத்து 638 வைரக் கற்களைப் பதித்து மோதிரத்தை உருவாக்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக 7 ஆயிரத்து 801 வைரங்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ள வைரமே கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தான் தயாரித்த வைர மோதிரத்தின் விலையைக் குறிப்பிடாத ஹரீஷ், அதனை விற்கும் எண்ணமில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments