பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1800 கோடி பெற்று மோசடி : ஜே பாலிசெம் நிறுவனத்தின் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

0 1235
பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1800 கோடி பெற்று மோசடி : ஜே பாலிசெம் நிறுவனத்தின் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை

பாரத ஸ்டேட் வங்கியில் 1800 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், டெல்லியில் உள்ள ஜே பாலிசெம் நிறுவனத்தின் மூன்று இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்நிறுவனம் மீது வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியதாக வழக்குத் தொடரப்பட்டதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.

வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன் தொகை சட்ட விரோதமான முறையில் வேறு கணக்குகளுக்கு மாற்றி விடப்பட்டதாக ஆடிட்டர் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments