நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்புக் குழுக்கள் இன்று தமிழகம் வருகை

0 1330
நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்புக் குழுக்கள் இன்று தமிழகம் வருகை

நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய அரசின் சிறப்புக் குழுக்கள், இன்று தமிழகம் வர உள்ளன.

நிவர் புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.

இதனால், தமிழகத்தின் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வீடுகள் சேதமடைந்தன. ஏராளமான வாழை, தென்னை போன்ற மரங்கள் சாய்ந்து விழுந்ததுடன், நெல் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.

இதையடுத்து, தமிழகத்திற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், புயல் சேதங்களை ஆய்வு செய்ய 4 நாள் பயணமாக, மத்திய உள்துறை இணைச் செயலாளர் தலைமையிலான, 7 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் இன்று தமிழகம் வர உள்ளன. தொடர்ந்து, பிற்பகல் 3.30 மணியளவில் இந்த குழு உறுப்பினர்கள் முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதையடுத்து, அடுத்த இரண்டு நாட்களுக்கு புயலால் பாதிக்கப்பட்ட, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

தொடர்ந்து, சேதமடைந்தவர்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்குவது என்பதை கணக்கிட்டு, அதுகுறித்த அறிக்கை மத்திய அரசிடம் வழங்கப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments