கோரிக்கை மனு அளித்த சில மணி நேரத்திலேயே மாற்றுத்திறனாளிக்கு அரசு பணி வழங்கி முதலமைச்சர் உத்தரவு

0 1684

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வேலை வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

மதுரையில் இருந்து சிவகங்கை நோக்கி முதலமைச்சர் காரில் சென்ற போது, காரைக்குடியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான மஸ்தான் பாதுஷா என்பவர், தனக்கு அரசு துறையில் பணி வழங்க கோரிக்கை மனு அளித்தார்.

அவரை காரைக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி பிரிவில் உள்ளீட்டார் பணிக்கு நியமனம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மஸ்தான் பாதுஷாவை வரவைத்து பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார். மனு அளித்த சில மணி நேரத்திலேயே உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சருக்கு, மஸ்தான் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments