அடையாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எருமை மாடுகள்... பத்திரமாக நீந்தி கரைக்கு வந்து சேர்ந்த காட்சி

0 2830

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் அடையாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எருமை மாடுகள் பத்திரமாக நீந்தி கரைக்கு வந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் உபரிநீரால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து, வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் எருமை மாடுகள் கூட்டமாக குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புத்தூர் தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளத்தில் சிக்கி கொண்டன.

வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மாடு ஒன்று, நீந்தி கரைவந்து சேரும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குன்றத்தூர் - ஸ்ரீபெரும்புதூர் தரைப்பாலத்தை பயன்படுத்தும் சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments