எதிரிகளின் விமானங்களை தாக்கி அழிக்க கூடிய 10 ஆகாஷ் ஏவுகணைகளை பரிசோதனை செய்த இந்தியா
சீனாவுடன் லடாக் எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், எதிரிகளின் விமானங்களை தாக்கி அழிக்க கூடிய 10 ஆகாஷ் ஏவுகணைகளை செலுத்தி இந்திய விமானப் படை சோதனை செய்துள்ளது.
ஆந்திராவின் சூர்யலங்கா பகுதியில் நடைபெற்ற சோதனையில் ஏவுகணைகள் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தன. சீன விமானங்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறினால் பதிலடி கொடுக்க கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்த ஏவுகணைகள் ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டுள்ளன.
ஆகாஷ் ஏவுகணையை மேலும் அதிக செங்குத்தான உயரத்திலுள்ள இலக்கை தாக்கும் விதத்தில் டிஆர்டிஓ மேம்படுத்தி வருகிறது. வீரர்கள் தோளில் வைத்து ஏவக்கூடிய இக்லா ஏவுகணைகளும் சோதனை செய்யப்பட்டன.
Comments