சட்டீஸ்கர் பெண் கேரள உள்ளாட்சி தேர்தலில் போட்டி!- பின்னணியில் சி.ஐ.எஸ். எப். வீரர் உயிரை காப்பாற்றிய சம்பவம்

0 52342
courtesy: manorama

சி.ஐ.எஸ். எப். வீரரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் தன் கையை இழந்த வட இந்திய பெண்ணை கேரள பாதுகாப்பு படை வீரர் ஒருவர் விரும்பி திருமணம் செய்தார். தற்போது, கேரள உள்ளாட்சி தேர்தலில் அந்த வட இந்திய பெண் போட்டியிடுகிறார்.

கேரள உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்து வருகிறது. இந்த தேர்தலில் ஏராளமான இளம் பெண்கள் போட்டியிடுகின்றனர். அப்படி, போட்டியிடும் பெண்களில் அதிகம் கவனத்தை ஈர்த்தவர் ஜோதி என்பவர்தான். இந்த ஜோதிக்கு கேரளா சொந்த மாநிலம் கிடையாது. சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜோதியை கேரள மாநிலத்தை சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் விரும்பி திருமணம் செய்தார். சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள தன்டேவாடா பகுதியை சேர்ந்த ஜோதி கடந்த 2010 ஆம் ஆண்டு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். ஜோதியின் முன் இருக்கையில் அமர்ந்து சி.ஐ. எஸ்.எப். வீரர் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்தார். சி.ஐ.‘எஸ். எப். வீரர் உறங்கிக் கொண்டிருந்த இருக்கையின் பக்கத்தில் டேங்கர் லாரி ஒன்று பக்கவாட்டில் இருந்து மோதியுள்ளது.

இதை கவனித்த ஜோதி, சற்றும் தயங்காமல் சி.ஐ.எஸ். எப். வீரரின் முகத்தை இழுத்து தள்ளி உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்த முயற்சியில்தான் ஜோதி தன் வலது கையை இழந்து போனார். சி.ஐ.எஸ். எப். வீரரின் உயிரை காப்பாற்றிய ஜோதி குறித்து அப்போது சட்டீஸ்கர் மாநில மீடியாக்கள் பெரியளவில் செய்திகள் வெளியிட்டன. சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள பைலாடிலா பகுதியில் சி.ஐ.எஸ்.எப். வீரராகப் பணியாற்றிய விகாஷ், ஜோதியின் துணிச்சல்மிக்க தன்னலமற்ற செய்கையால் கவரப்பட்டு, அவரை விரும்பித் திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து, 2011 - ஆம் ஆண்டு கோவை விமான நிலையத்துக்கு விகாஷ் மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து, விகாஷ் தன் மனைவி ஜோதியுடன் பாலக்காட்டுக்கு குடி பெயர்ந்தார். பாலக்காட்டில் மலையாள, தமிழ் மக்களுடன் ஒன்றுடன் ஒன்றாக கலந்து விட்ட ஜோதி இப்போது கேரள உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகிறார். கொல்லங்கோடு அருகேயுள்ள தன் கணவரின் சொந்த ஊரான பாலத்துளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அவருக்கு செல்லுமிடமெல்லாம் வரவேற்பு கிடைத்து வருகிறது. கேரள பெண்கள் போலவே நெற்றியில் சந்தன பொட்டு வைத்து காதில் ஜிமிக்கி அணிந்து வலம் வரும் ஜோதி எளிதாக வெற்றி பெறுவார் என்கிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments