நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்து வரும் கனமழை

0 4416
நகராமல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்து வரும் கனமழை

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால், தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.

மன்னார் வளைகுடா வழியாக, இராமேஸ்வரம்-பாம்பனை நெருங்கிய புரெவி புயல் வலுவிழந்து, தொடர்ந்து நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது.

அது வலுவிழந்து ராமநாதபுரம் வழியாக மேற்கு-தென்மேற்கு திசையில் தெற்கு கேரள பகுதியை நோக்கி நகரும் என்றும் அதன் பிறகே மழைப்பொழிவு குறையும் என்றும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே இடத்தில் நகராமல் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், கடந்த 24 மணி நேரத்தில் 11 இடங்களில் அதிகனமழயும் 50 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments