புழல் ஏரி 90 சதவீதம் கொள்ளளவை எட்டியது - உபரிநீர் திறப்பு

0 3868

புழல் ஏரி தனது 90% கொள்ளளவை எட்டியதை அடுத்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா நதி நீர் வரத்து மற்றும் தொடர் மழை காரணமாக 21.2 அடி மொத்த உயரம் கொண்ட புழல் ஏரி, 19.85 அடிக்கு நிரம்பியுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 1750 கன அடி வீதமாக உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த தண்ணீர் சுமார் 13.5 கி.மீ. கால்வாய் வழியே பயணித்து எண்ணூர் கடலில் கலக்கும். இதன் காரணமாக, அவ்வழியாக உள்ள 10-க்கும் மேற்பட்ட பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments