அதிக வேலைவாய்ப்புகளை வெளிநாட்டவருக்கு வழங்கிய பேஸ்புக்? - அமெரிக்க அரசு வழக்கு
பேஸ்புக் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து வந்த பணியாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டி அமெரிக்க அரசு வழக்கு தொடுத்துள்ளது.
அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் வெளிநாட்டவர்களால் பறிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டி வந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான பேஸ்புக், அதிக ஊதியமுள்ள வேலை வாய்ப்புகளை உள்நாட்டினருக்கு வழங்காமல், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு வழங்கியுள்ளதாக அதன்மீது அரசு வழக்குத் தொடுத்துள்ளது.
2018 ஜனவரி முதல் 2019 செப்டம்பர் வரை இவ்வாறு இரண்டாயிரத்து அறுநூற்றுக்கு மேற்பட்ட பணியிடங்களை வெளிநாட்டவருக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
Comments