நிவர் புயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை

0 4119
நிவர் புயல் பாதிப்பை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை

நிவர் புயல் பாதிப்பு சேதங்களை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வரவுள்ளது.

புயலால் அண்மையில் கடலூர், புதுச்சேரி, சென்னை , வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் பயிர்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் தலைமையில் 2 குழுக்கள் டெல்லியிலிருந்து சென்னைக்கு நாளை மதியம் 1 மணிக்கு வரவுள்ளது.

பின்னர் மதியம் 3.30க்கு  முதலமைச்சரை சந்தித்து அக்குழு ஆலோசனை நடத்தவுள்ளது. இதன் பின்னர் 2 குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்யும் குழு, சென்னைக்கு 8ம் தேதி திரும்புகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments