அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

0 7790
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11 இடங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 36 சென்டி மீட்டரும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 34 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், தமிழகம் முழுவதும் 11 இடங்களில் அதிகனமழையும் 50 இடங்களில் கனமழையும் பதிவானதாகக் கூறினார்.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறிய அவர், மாநிலம் முழுவதும் 2 நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்கும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments