திருவள்ளூர் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் நகை திருட்டு

0 973
திருவள்ளூர் அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் நகை திருட்டு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கட்டிட ஒப்பந்ததாரர் வீட்டின் பூட்டை உடைத்து 200 சவரன் நகை திருடிச் செல்லப்பட்டுள்ளது.

உத்தண்டி கண்டிகையைச் சேர்ந்த முனிநாதன் என்ற அந்த ஒப்பந்ததாரர், சென்னையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரைப் பார்க்க நேற்றிரவு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

காலை வந்து பார்த்தபோது, பின்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 200 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி, இரண்டரை லட்ச ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments